நடிகர் சங்கம் இருக்க காரணமே இவர் தான்.. "கேப்டன்" பெயரை சூட்ட கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர்கள் சங்க முன்னாள் தலைவரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த்  உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். இதையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் தீவு திடலுக்கு மற்றப்பட்டதால் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நடிகர் சங்கம் இருப்பதற்கு காரணமே கேப்டன்தான், நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு கேப்டனின் பெயரை வைக்க வேண்டும் என ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

request vijayakanth to actor union building


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->