மீண்டும் ஊரடங்கு எதிரொலி: முக்கிய படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.! அதிகாரபூர்வ அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). இவர் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. உலகம் முழுவதும் இந்த படத்தை வெளியிட உள்ளனர். 

‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்) படம் ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி என்று தமிழக அரசு நேற்று அறிவித்து இருந்தது.

இதன் காரணமாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சற்றுமுன் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR MOVIE DATE CHANGE


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->