இந்திய சினிமாவின் பெருமையை சரியான நேரத்தில் உங்களிடம் சேர்ப்போம்... RRR படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.. இது தான் காரணமா?. - Seithipunal
Seithipunal


RRR படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளவர் ராஜமௌலி. அதன் பின் அவர் இயக்கும் படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.  இந்நிலையில், அவர் அடுத்ததாக இயக்கிய சஹோ படம் சுமாரான வரவேற்பபையே பெற்றது.

இதனை அடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜீனியர் என்டிஆர் வைத்து ராஜமௌலி படம் இயக்க போவதாக அறிவித்தார்.

நான்கு ஆண்டு கால உழைப்பிற்கு பின் வருகின்ற 7ம் தேதி RRR படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுப்பட்டது.

இந்நிலையில், RRR திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இர்து தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

உழைப்பை போட்டாலும் சில விஷயங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. இந்தியாவில் பல திரையரங்குகள் மூடப்படுவதை காணமுடிகிறது. உங்கள் எதிர்பார்ப்புகளை சிறிது காலம் தள்ளி வையுங்கள்.

இந்திய சினிமாவின் பெருமையை (RRR) சரியான நேரத்தில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்போம் என தெரிவித்துள்ளனர். RRR படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR Release Date Postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->