ரீ ரிலீசாகும் விஜய்யின் சச்சின் திரைப்படம் - எப்போது தெரியுமா?
sachin movie re release
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
அதன் படி கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த படமான 'சச்சினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்த நிலையில், இதில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இந்த நிலையில், 'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததால், இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். அதன் படி 'சச்சின்' படம் ஏப்ரல் 18-ந்தேதி வெளியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு சச்சின் படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.