பாஜகவுடன் கூட்டணி எதிரொலி: அதிமுக நிர்வாகி விலகல்!
ADMK BJP Alliance issue Pudukottai KSM Kani resign
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான என்டிஏ (பாஜக) கூட்டணி போட்டியிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் அறிவித்தது முதல் அதிமுகவுக்குள் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அதிமுகவின் மூத்த தலைவர்கள் கையை பிசைக்கும் நெருக்கடியில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முடிவுக்கு எதிராக, அதிமுகவின் முடிவை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் பிரிவு நகரச் செயலாளர் கே.எஸ். முகமது கனி, தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
பாஜகவை அதிமுக கூட்டாளியாக ஏற்க முடியாது என்ற தன் நிலைப்பாட்டைத் தெரிவித்து, அவர் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் சி. விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள அவரின் அந்த கடிதத்தில், “முழு மனப்பூர்வமாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டவனாக இருக்க விரும்புகிறேன். எனவே, நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பதவியையும், அடிப்படை உறுப்பினராக உள்ள என் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK BJP Alliance issue Pudukottai KSM Kani resign