சென்னை: இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! மேலும் 200 மூன்றாவது கண்கள்!
Chennai traffic police CCTV
சென்னை போக்குவரத்து போலீசார், சாலை விதி மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன கேமராக்களை பெரிதளவில் நிறுவி வருகின்றனர்.
இதற்காக முதற்கட்டமாக 200 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்போது மேலும் 200 கேமராக்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்தை சீரமைக்கவும் போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, அந்த இடங்களில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமராக்கள் படம் பிடித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றன.
அதில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராத தகவல்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன.
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இந்த செயல்முறை மேலும் துல்லியமாகியுள்ளது. விதி மீறிய நேரம் மற்றும் புகைப்படங்கள் வரை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்படும்.
இதனால் தவிர்க்க முடியாத முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. இது, வாகன ஓட்டிகளிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கிறது.
மேலும், 360 டிகிரி கேமராக்கள் பொருத்தப்பட்ட ரேடார் வாகனங்களும் முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்பட்டு, விதிமீறலை கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றன.
இந்த முயற்சிகள், சாலை பாதுகாப்பை பலப்படுத்தும் என போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
English Summary
Chennai traffic police CCTV