8 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்!
Andhra killed husband Pregnant wife
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 8 மாத கர்ப்பிணியான மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம் நகரில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்த ஞானேஷ்வர் என்பவருக்கும், அவரது மனைவி அனுஷா (27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது அனுஷா 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
இன்று காலை ஒரு சின்ன விவாதம் வன்முறைக்கு மாற, சகிப்பு எல்லையை மீறிய ஞானேஷ்வர், தனது கர்ப்பிணி மனைவியின் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்.
இதனால் அனுஷா மயங்கி விழுந்தார். நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த ஞானேஷ்வர், அவரை கையில் தூக்கிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவர்கள் அனுஷா ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து ஞானேஷ்வர் போலீசில் சரணடைந்தார். குற்றச்சாட்டை போலீசார் உறுதிப்படுத்தியதுடன், வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
English Summary
Andhra killed husband Pregnant wife