கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்த பிரம்மாண்டம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப் மூலம் உலக திரைப்பட ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் 3ம் பாகத்திற்கு முன்பு தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் "சலார்" எனும் திரைப்படம் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் சலார் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் நான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைகளம் கொண்ட இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை தற்பொழுது எட்டியுள்ளது.

சலார் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவு பெற உள்ள இந்த நிலையில் படத்தின் டீசர் வரும் ஜூலை 6ம் தேதி மாலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை பிரபாஸ் ரசிகர்களும் இயக்குனர் பிரசாந்த் நீல் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salaar movie teaser will be released on 6thJuly


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->