சமுத்திரக்கனியின் அடுத்த படத்தின் அப்டேட்.! பிரபல நடிகர் வெளியிட்ட போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் சமுத்திரக்கனி. இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்திலும் இவருடைய நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ரைடர் திரைப்படம் விமர்சனரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'பப்ளிக்' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் பரமன் இயக்கவுள்ளார்.

மேலும், இந்த படத்தில் படத்தில் காளி வெங்கட், ரித்விகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும்  நடிகர் விஜய் சேதுபதியும்  வெளியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samuthrakani next movie name Public


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->