சந்தானம் திரைப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக்!
Santhanam movie title First Look
என். ஆனந்த் இயக்கத்தில் ஜி.என். அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்தநிலையில் இந்த திரைப்படத்திற்கு ''இங்க நான் தான் கிங்கு'' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர் கமலஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Santhanam movie title First Look