ஸ்டாலின் vs இபிஎஸ் இடையே அனல் பறக்க நடந்த விவாதம்! துண்டிக்கப்பட்ட நேரலை! - Seithipunal
Seithipunal



தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 

பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை ஏற்கனவே ஆளுநர் உரையில் அவர் வாசிக்கவில்லை. அப்போது எல்லாம் ஆளுநரைக் கண்டித்து நீங்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதிலளித்த முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரின் உடல்நலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். இம்முறை ஆளுநர் முழுவதும் உரையை படிக்காமல் சென்றுள்ளார். அதனால்தான், உடனே போராட்டம் நடத்தினோம் என்றார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

எங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோ, அங்குதான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் கொடுத்தார்.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்தை நேரலையில் காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா? ஆளுநர் உரையை ஆளுநர் வாசிக்கவில்லை. சபாநாயகர் தமிழில் வாசித்த உரையாகத்தான் கருத முடிகிறது" என்று தெரிவித்தார்.

அப்போது பதிலளித்து பேசிய சபாநாயகர், "இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லைவ் செய்ய முடியவில்லை. DD அனுமதியின்றி உள்ளே வந்தபோதும் அவர்களை வெளியே அனுப்பினோம். இது குறித்து ஏற்கனவே விளக்கத்தை அளித்துள்ளேன்" என்றார்.

தொடர்ந்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உரையை நேரலையில் காட்டாமல் இணைப்பை துண்டித்து விட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வந்ததும் நேரலை முழுவதுமாக துண்டிப்பு. அனைத்து கேமராக்களிலும் Technical Fault ஆகிவிட்டதா சபாநாயகர் அப்பாவு அவர்களே?

"ஆளுநர் எதிர்ப்பு" என்ற பெயரில் ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் நாடகத்தை சட்டமன்றத்தில் தோலுரித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly ADMK EPS vs MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->