சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்!
Santhanam movie update
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''வடக்குப்பட்டி ராமசாமி''. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் ''வடக்குப்பட்டி ராமசாமி'' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை பாடக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது,
இந்த திரைப்படத்தின் முதல் பாடல் 'ஆபராக்கோ டாபராக்கோ' பாடல் நாளை வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.