பிரபல நடிகரின் நியூ ஹேர் ஸ்டைல்! சீரழியும் பள்ளி மாணவர்கள்! சலூன் கடைகளுக்கு ஆசியர்கள் கடிதம்! - Seithipunal
Seithipunal


பிரபல கன்னட நடிகரான சுதீப், தமிழில் நான் ஈ, புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சுதீப்பை கன்னட ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் ஹெப்பிலி என்ற கன்னட படத்தில் சுதீப் தலையில் ஒரு பக்கத்தில் முடியை குட்டையாக வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமாக சிகை அலங்காரம் செய்து இருந்தார்.

இதை பார்த்த மாணவர்கள் சலூன் கடைகளுக்கு சென்று நடிகர் சுதீப்பை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். இதனால் கடுப்பான சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் அந்த பகுதியில் உள்ள சலூன் கடைகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில்  "ஹெப்பிலி படத்தில் வரும் சுதீப் சிகை அலங்காரத்தை பார்த்து பள்ளி மாணவர்களும் தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள். இந்த பழக்கத்தால் அவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் சிகை அலரங்காரம் செய்ய வேண்டாம்'' என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School students go to salons and get their hair cut like Sudeep teachers complain


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->