மணிவண்ணண் திருமணத்தில் போட்டிருந்த கோட் சூட் கதை தெரியுமா.? மறைந்த இயக்குனர் மனோ பாலா தெரிவித்த ரகசியம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குனர் கதயாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பல பரிணாமங்களைக் கொண்டவர் மறைந்த நடிகர் மணிவண்ணன். பாரதிராஜாவிடம் உதவி  இயக்குனராகப் பணியாற்றிய இவர் பாலைவன ரோஜாக்கள், நூறாவது நாள், அமைதிப்படை என பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

நிகழ்கால அரசியலை நக்கல் நையாண்டியுடன் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் தனது திரைப்படங்களில் வசனமாக வைத்திருப்பவர் மணிவண்ணன். சில காலங்கள் இயக்குனராக பணியாற்றிய இவர் பின்னர் முழு நேர நடிகராக மாறிவிட்டார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களில் மற்றும் ஒரு முக்கியமான நபர் சமீபத்தில் மறைந்த  இயக்குனர் மற்றும் நடிகர் மன மனோபாலா. இவரது ஆகாய கங்கை என்ற திரைப்படத்தில் மணிவண்ணன் தான் வசனம் எழுதியிருப்பார். இவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்புறவு இருந்தது. சமீபகாலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த மனோபாலா மணிவண்ணனை பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

மணிவண்ணன் திருமணம் செய்து கொண்ட போது ஒரு விசித்திரமான கோட் சூட் அணிந்து இருப்பார். இணையதளங்களில் இன்று கூட தேடிப் பார்த்தால் அவரது திருமண போட்டோ இருக்கும். அந்தக் கோட் சூட்டை மணிவண்ணனுக்கு கொடுத்தது இயக்குனர் பாரதிராஜா. இந்த விஷயத்தை தான் மனோபாலா தான் பகிர்ந்து இருக்கிறார். மணிவண்ணன் திருமணத்திற்காக தான் அணிந்திருந்த கோட் சூட் ஒன்றை பாரதிராஜா கொடுத்ததாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் மனோபாலா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Secret of Director manivannan marriage coat suit story said by late Manobala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->