நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பாலிவுட் உலகம்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு, நீரிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அகமதாபாத்தில் உள்ள கேடி மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் அனுமதிக்கப்பட்டு, ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நேற்று KKR மற்றும் SRH இடையேயான ஐபிஎல் பிளே-ஆஃப் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்காக ஷாருகே இரண்டு நாட்களுக்கு முன்பு அகமதாபாத்துக்கு வந்திருந்தார்.

இந்த ஆட்டம் முடிந்ததும், அணியினருடன் அகமதாபாத்தில் உள்ள ஐடிசி நர்மதா ஹோட்டலுக்கு இரவு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மதியம் 1 மணியளவில் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் முதன்மை சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது, ​​அவரது உடல்நிலை சீராக உள்ளதால், போதிய ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவர்களின் தகவல்படி, ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு, நீரிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டார் என்று தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் குஜராத்தின் தலைநகரில் வெப்பநிலை சுமார் 45 டிகிரியாக இருந்தது, மேலும் வானிலை ஆய்வு மையமும் நகரத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shahrukhkhan admited in Hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->