ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் மற்றும் அமித்ஷா திடீர் சந்திப்பு..!
Jammu and Kashmir Chief Minister and Amit Shah meet
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இவர்கள் இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது ஜம்மு காஷ்மீரின் நிலைமை குறித்து முதலமைச்சர் உமர் அப்துல்லா, அமித் ஷாவுக்கு தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/omar-ucjdt.jpg)
அண்மையில் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் தற்கொலை செய்துகொண்டு ஒருவர் மரணித்தது மற்றும் வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் உள்ள சோதனைச் சாவடியில் நிற்காததால் லாரி ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து முதலமைச்சர் உமர் அப்துல்லா அமித் ஷாஷாவுக்கு விளக்கமளித்ததாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.
![](https://img.seithipunal.com/media/omar abh-hzqn3.jpg)
மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உமர் அப்துல்லா, அமித் ஷாவை வலியுறுத்தியதாக தகவலும் வெளியாகியுள்ளது.
அத்துடன், காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய சேவைகள் மற்றும் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
English Summary
Jammu and Kashmir Chief Minister and Amit Shah meet