நடன இயக்குனர் சதிஷ் இயக்கும் கவினின் 05-வது படத்தின் டைட்டில் நாளை..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் டைட்டிலை நாளை மாலை 05 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் கவின்  Guitar உடன் ஸ்டைலிஷாக இருக்கிறார்.

இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன.அத்துடன் இப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The title of Kavin 5th film will be announced tomorrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->