வைகை புயல் வடிவேலுக்கு எதிராக திரண்ட கிராம மக்கள் - நடந்தது என்ன?
village peoples against actor vadivelu
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. சினிமா துறையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த அவர் மீது பல துணை நடிகர்களும் அவர் மீது பல குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நடிகர் வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ அய்யனார் கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள காட்டு பரமக்குடியில் அமைந்துள்ளது.
இந்த அய்யனார் கோவிலில் நடிகர் வடிவேலு தனது நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை அறங்காவலராக நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்து, கிராம மக்கள் கோவில் முன்பு திரண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:- “நடிகர் வடிவேலு எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல், அவருக்கு நெருங்கிய நபரிடம் கோவிலை ஒப்படைக்க முயற்சி செய்கிறார். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
வடிவேலின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லோருக்கும் பொதுவான குலதெய்வ கோவிலை அபகரிக்க முயற்சி செய்வதாக நடிகர் வடிவேலு மீது கிராம மக்கள் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
village peoples against actor vadivelu