08 வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை; குற்றவாளியான ஆட்டோ டிரைவர் கைது..!
Auto driver arrested for raping and murdering 8th grade student
நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் கொலை சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர், கொல்கத்தாவில் நள்ளிரவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம், மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/08 stu-7bjpd.jpg)
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது: கொல்கத்தா நியு டவுன் பகுதியை சேர்ந்த மாணவி, சரியாக படிக்கவில்லை என தன் தாயார் திட்டியதால், இரவு 10:00 மணிக்கு மேல் கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு சென்றுள்ளார்.
வீடு திரும்ப முடியாமல் நள்ளிரவில் பரிதவித்தபோது, அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ டிரைவரிடம், தன்னிடம் பணம் இல்லை என்றும், வீட்டில் விடும்படியும் கூறியுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/kolko-nrcs7.jpg)
மாணவியை ஆட்டோவில் ஏற்றிய டிரைவர் சவுமித்ரா ராய், மற்ற பயணியரை இறக்கி விட்ட பின், மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
இதற்கிடையே, தன் மகள் காணாமல் போன தகவல் அறிந்த அவரது தாயார், புகார் அளித்த நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, கடைசியாக மாணவியை அழைத்துச் சென்ற சவுமித்ராவை பிடித்து விசாரித்தோம் என்று போலீசார் கூறியுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/kol-bhkn8.jpg)
சவுமித்ரா ராய் உண்மையை ஒப்புக்கொண்டதாகவும், அவர் அளித்த தகவலின்படி, கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன், வீட்டில் இருந்து 06 கி.மீ., தொலைவில் ஆள் அரவமற்ற கட்டட வளாகத்தில் மாணவி உடலை மீட்டதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கைதான சவுமித்ரா ராய் மீது ஏற்கனவே பாலியல் வழக்குகள் உள்ளதோடு, அவர் எட்டு மாதம் சிறையிலும் இருந்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Auto driver arrested for raping and murdering 8th grade student