அஜித்குமார் பிறந்தநாள் - 23 லட்சத்திற்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித்குமார், துணிவு படத்தை தொடர்ந்து, விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டிற் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து நடிகர் அஜித், குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, அஜித் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என்று பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அஜித்தின் பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் அளிக்கும் விதமாக ஷாலினி டுகாட்டி மாடல் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த  பைக்கின் விலை கிட்டத்தட்ட 23 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அஜித்திற்கு அவர் கிப்ட் -ஆக கொடுத்துள்ள அந்த பைக்கின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shalini bidukati bike gift to actor ajithkumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->