கல்யாணமான ஒரே வருஷம்.. தான் சீரியல் நடிகருக்கு பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


கன்னடத் திரையுலகின் பிரபல சீரியல் நடிகரான சம்பத் ஜெயராம் என்பவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரை உலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் அக்னிசாக்ஷி என்ற சீரியல் சம்பத் ஜெயராமிற்கு மிகப்பெரிய வரவேற்பையும் ஏராளமான ரசிகர்களையும்  கொடுத்தது. இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து வந்தார் அவர்.

சின்னத்திரை உலகில் இவரது நடிப்பு பிரபலமாக பேசப்பட்டாலும் பெரிய திரையில் இவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இவர் சமீபத்தில் நடித்து வெளியான பாலாஜி போட்டோ ஸ்டுடியோஸ் என்ற திரைப்படம் அனைத்து ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இவரிடம் அனைத்து திறமைகளும் இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில்  சிறிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமே  வாய்ப்பு கிடைத்து வந்திருக்கிறது. இதனால் மிகவும் மன வருத்தத்திலிருந்த இவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான ஒரு வருடத்திற்குள்ளே பட வாய்ப்புகளில்லாத விரக்தியில் கன்னட  நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking news of a serial actor who committed suicide within a year of marriage


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->