"சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்துக்கு எழுந்தது சிக்கல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கி உள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி நடிகர் கமல்ஹாசனுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள்கள் மற்றும் மகன் விடுத்துள்ள அந்த கோரிக்கையில், 

"தமிழ் இலக்கிய உலகில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ஒரு மைல்கல் எனவும் ஜெயகாந்தனையும் அவரது எழுத்துகளையும் உண்மையாக மதிப்பவர்கள் இத்தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்.

டிஜிட்டல் சுவடுகளால் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படைப்பு அழிக்கப்படக்கூடாது என்பதால் தாங்கள் (கமல்ஹாசன்) முன்னிலையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும்" என்று ஜெயகாந்தனின் மகள்கள் மற்றும் மகன் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sila Nerankalil Sila Manitharkal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->