அடடே பிரியாணியா... ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த சிம்பு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திரமாக இருந்து  இன்று முன்னாடி நட்சத்திரம் ஆக உயர்த்து நிற்பவர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு இவர் கொடுத்திருக்கும் ரீ என்ட்ரி  மாஸாக இருக்கிறது.

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு  திரைப்படத்தில் கௌதம் மேனனுடன் பணியாற்றினார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இந்தத் திரைப்படத்தில் கௌதம் மேனன் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம்  ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு இருக்கிறது. மற்ற ரசிகர்களுக்கு  விருப்பமான ஒன்றாக இல்லாவிட்டாலும் சிம்பு ரசிகர்களுக்கு  படம் மிகவும் மாஸாக இருப்பதாக கொண்டாடி வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளிவந்திருக்கிறது.

சிம்பு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடியிருக்கிறார். தன்னுடைய மூன்று படங்களின் வெற்றிக்கும் தன்னுடனிருந்த ரசிகர்களுக்கு  நன்றியை தெரிவித்து சிம்பு  அது தொடர்பாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து  அவர்களுடன் உரையாடி ஆலோசனை செய்ததுடன்  அவர்களுக்கு தனது கைகளால் பிரியாணியும் பரிமாறி இருக்கிறார்.  எத்தனையோ சினிமா நட்சத்திரங்கள்  தங்களது ரசிகர்களுக்கு விருந்து வைத்தாலும் அவர் கையாலேயே பரிமாறியது சிம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu hosted his fans andserve them food by hiself


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->