அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகும் சிம்பு.?! ப்ரோமோ வீடியோ ஷூட்டிங்.?!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி துவங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் துவங்கியது. 

போட்டியாளர்கள் அனைவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்ற காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் அவர்கள் மிகவும் கவனமாக விளையாடி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், நிரூப், ஜூலி, அபிராமி, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, தாமரைச்செல்வி, அனிதா சம்பத், சினேகன் மற்றும் ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் தற்போது வீட்டில் இருகின்றனர். 

விஜய் டிவியில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்று சந்தேகம் இருந்து வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க போவதாகவும், அதற்கான ப்ரோமோ வீடியோ எடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu may host bb ultimate


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->