ரஜினியின் இடத்தை பிடித்த சிம்பு.?! நன்றிக்கடன் செலுத்தும் கமல்.! - Seithipunal
Seithipunal


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகியவர் தேசிங்கு பெரியசாமி. இவர் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குவதாக  கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் ஜெயிலர் மற்றும் லால் சலாம் திரைப்படங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ஜெய் பீம் படத்தின் இயக்குனருடன் ஒப்பந்தமாகிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன்  தேசிங்கு பெரியசாமிக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக அடுத்த தயாரிக்கப் போகும் திரைப்படத்திற்கு தேசிங்கு பெரிய சாமியை இயக்குனராக அறிவித்திருக்கிறார் கமல். மேலும், இந்த திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக ஒப்பந்தமாக இருக்கிறார்.

பத்து தல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தனது 48 வது படத்தில் தேசிங்கு பெரிய சாமியுடன் இணைகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல்  பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம்  ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டை கொண்டதாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பத்து தல படத்திற்குப் பிறகு தனது சம்பளத்தை 40 கோடியாக நிர்ணயித்த சிம்பு இந்தத் திரைப்படத்திற்காக அதனை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறாராம்.

இது பற்றி ராஜ்கமல் ஃபிலிம் சார்ந்த மகேந்திரன் என்பவர் தெரிவிக்கையில் கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பல நடிகர்களை கேட்டுக் கொண்ட போதும் யாரும் முன் வரவில்லை. ஆனால் சிம்பு அவராக வந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நன்றி கடனை பாராட்டும் வகையில் சிம்புவை ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் கொண்டுவர கமல்ஹாசன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

simbu teams up with desingu periyasamy for his next project


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->