"என்னைப் போன்று நீயும் ஆகி விடாதே "... நடிகைக்கு அறிவுரை கூறிய நடிகர் திலகம்.! - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவின் உன்னதமான நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். இன்று வரை இருக்கும் நடிகர்களுக்கும் இனி வரப்போற நடிகர்களுக்கும் ஒரு இலக்கணமாக திகழ்ந்தவர். இவரது நடிப்பின் மூலமே பல வரலாற்று கதாநாயகர்களும் நமக்கு அறிமுகமாயினர்.

இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அத்தனை கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக  ரசிகர்களின் கண்முன் நிறுத்தியவர். இவர் நடித்த பராசக்தி திரைப்படம் இன்று வரை மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. நாடகத்திலிருந்து சினிமா துறைக்கு வந்தவர் சிவாஜி கணேசன்.

இவருடன் பசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சத்யா. அந்தத் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம்  மிகவும் ரசிகர்களால் விரும்பப்பட்டதால்  பசி சத்யா என்ற இவர் அழைக்கப்பட்டார். சிவாஜி கணேசனுடன் தான் பகிர்ந்து கொண்ட நினைவுகளை  தற்போது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பசி சத்யா.

அவருடன் ஒரு காட்சியின் போது தனது நடிப்பை வெகுவாக பாராட்டியதாக தெரிவித்த சத்யா தன்னை நாடகங்களில் தொடர்ந்து நடிக்கும்படி சிவாஜி கணேசன் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். தனக்கு வயதாகி விட்டதாக கூறி தன்னை எங்கேயும் செல்ல அனுமதிப்பதில்லை என்று தெரிவித்த சிவாஜி. நீ இப்படி இருந்து விடாதே இருக்கும் வரை  நாடகங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இரு என தனக்கு அறிவுரை கூறியதாகவும் அந்த பேட்டியில்  தெரிவித்திருக்கிறார் பசி சத்யா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivaji ganeshan advised the actress not to become like me


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->