'பிரின்ஸ்' பட பாதியிலேயே ஓட்டம் பிடித்த சிவகார்த்திகேயன் மனைவி.?!  - Seithipunal
Seithipunal


மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று டாக்டர் படம் வரை என பல படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார். அவரது முதல் தயாரிப்பு படமான கனா பலரின் கவனத்தை பெற்று பெரும் பாராட்டுகளை அள்ளித்தந்தது. 

சமீபத்தில் இவரது நடிப்பில், டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று, அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகியுள்ளது. அயல் நாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். 

இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியாகியது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நபர் வெளிநாட்டு பெண்ணை காதலிப்பது குறித்த கதை தான் இந்த படம். வழக்கம்போல இந்த படத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

இத்தகைய சூழலில் இன்று ரோகினி திரையரங்கில் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் பிரின்ஸ் படத்தை பார்க்க சென்றார். படம் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தபோது பாதியில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி இருவரும் வெளியேறி விட்டார்கள். படம் ஒளிபரப்பாகும் போது பாதியிலேயே நடிகரும் அவரது மனைவியும் கிளம்பி போனது பேசு பொருளாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan wife escaped prince movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->