சிவகார்த்திகேயன்-சாய்பல்லவி படத்தின் ஷூட்டிங் எப்போது.? வெளியான அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது, அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் பிஸியாக நடித்து வருகின்றார். 

சாய்பல்லவி விராட பருவம் என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்திருக்கிறார். இதில் பாகுபலி புகழ் ராணா டகுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 1ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

தமிழிலும் தனுஷ் மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவியது. எனவே, தமிழ் படங்களில் நடிக்கவே வேண்டாம் என்று சாய்பல்லவி முடிவெடுத்துள்ளார். 

தெலுங்கில் சாய் பல்லவி நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்நிலையில், அடுத்ததாக சாய்பல்லவி ஜுனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்க இருக்கிறார். 

இதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து 21 படத்தில் நடிக்கிறார் அனிருத் இசையமைக்கும் நிலையில் ராஜ்குமார் இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க இருப்பதாகவும் இது 2023 இல் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sk 21 movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->