INDvsENG: சென்னை சேப்பாக்கத்தில் இந்தியாvs இங்கிலாந்து டி20 ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை!
INDvsENG T20 chennai 2025
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் கலந்து கொள்கிறது. இந்த போட்டிகள் நாட்டின் பல்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளன.
டி20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 22 அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது டி20 போட்டி சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி 25 அன்று நடைபெறும்.
இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை ஜனவரி 12 காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ரூ.1500 முதல் ரூ.15,000 வரை உள்ள விலைகளில் கிடைக்கின்றன என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
INDvsENG T20 chennai 2025