மாவீரன் படத்தின் போஸ்டர் வெளியீடு.! புத்தாண்டு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு.!
SK in maveeran poster
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் தான் மாவீரன். இதனை யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இயக்கி வருகின்றார்.
இவர் ஏற்கனவே தனது படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக அதிதி சங்கர் நடித்து வருகின்றார். இந்த படத்தில், இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவு நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது.
இத்தகைய சூழலில், மாவீரன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.