67வது ஃபிலிம் ஃபேர் விருதுகள்.. 7 விருதுகளை வாரிக்குவித்த சூரரைப்போற்று திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் சினிமாவில் சிறந்த திரைப்படங்களுக்கான அங்கீகாரங்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் 67 வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன. பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021 ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன. 

இதில், கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கங்கார இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை பெற்ற இந்த திரைப்படம் 5 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 67 ஆவது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 7 விருதுகளை வாங்கியுள்ளது. அதன்படி,

சிறந்த நடிகர் - சூர்யா

சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா

சிறந்த இசையமைப்பாளர் - ஜிவி பிரகாஷ் குமார்

சிறந்த துணை நடிகை - ஊர்வசி

சிறந்த பின்னணி பாடகர் - கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்

சிறந்த பின்னணி பாடகி - தீ

சிறந்த ஒளிப்பதிவு - நிக்கோத் பொம்மி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sooraraipotru movie won 7 flim fare Awards


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->