தமிழக முன்னேற்றத்திற்கு திமுக அரசுதான் தடையாக உள்ளது: அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள் என்கிறார் எச்.ராஜா..! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னேற்றத்திற்கு திமுக அரசுதான் தடையாக உள்ளது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது. நாங்கள் மக்கள் பிரச்சினைக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கவர்னர் நிகழ்ச்சி நடக்கும்போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபு. இதை செய்யத் தவறிய அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள். கவர்னர் நிகழ்ச்சியில் தேசியத்தையும், தேசத்தையும் அவமானப்படுத்துவது போல் நடந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். தேசியம் வருவதை எதிர்ப்பதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு மிக மோசமாக செயல்படுகிறது. இதற்கு காவல்துறை, துணைபோகாமல் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்து உள்ளார்.

அத்துடன், திமுக அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடன் வாங்கியது தவிர வேறு எதுவும் செய்யவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் கோடி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறியாமல் தமிழகத்திற்கு விடிவில்லை என்று  எச்.ராஜா அவர்கள் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The DMK government is the only obstacle to the progress of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->