ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் படுகொலை; உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்..!
5 members of the same family murdered Shocking incident in Uttar Pradesh
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லசாரி கேட் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொஹீன் என்பவரது வீடு கடந்த புதன்கிழமை முதல் பூட்டப்பட்டு கிடந்த நிலையில், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். குறித்த வீட்டிற்குள் மொஹீன், அவரது மனைவி அஸ்மா, மகள்கள் அப்சா(8), அஜேசா(4) மற்றும் அதிபா(1) ஆகிய 05 பேரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மொஹீன் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் தரையில் கிடந்த நிலையில், அவர்களது 03 குழந்தைகளின் சடலங்களும் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அனைவரது உடலிலும் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பின்னர் 05 பேரின் சடலங்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த படுகொலை தொடர்பில் போலீசார் கூறுகையில், முன்பகை காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
5 members of the same family murdered Shocking incident in Uttar Pradesh