காற்று வாக்குல 2 காதல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இதில், நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த நவம்பர்-18 ஆம் தேதி நயன்தாராவின் 37 வது பிறந்தநாள் கொண்டாடபட்டதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. 

அதில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தனித்தனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இந்த படம் வரும் டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் கிரிக்கெட்  சூதாட்ட புகாரில் சிக்கி தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் அண்மையில் தடை நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srishanth in Kathu vakkula 2 Kadhal movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->