தமிழகம்: தனது 14 வயது சகோதரியை காதலித்த கல்லூரி மாணவனை குத்தி கொலை செய்த சிறுவன்!
Sivakasi love issue murder case
சிவகாசி அருகே சகோதரியை காதலித்ததாக கல்லூரி மாணவனை, குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த வீரமாணிக்கம் (வயது 18) என்ற கல்லூரி மாணவர், 14 வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதை எதிர்த்த சிறுமியின் சகோதரரான 17 வயது சிறுவன், கல்லூரி மாணவன் வீரமாணிக்கத்திடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தாக்கிக்கொண்ட நிலையில், தகராறு எழுந்த நிலையில், சிறுமியின் சகோதரரான 17 வயது சிறுவன், கல்லூரி மாணவன் வீரமாணிக்கத்தை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றச் செயலுக்கு தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Sivakasi love issue murder case