விஜயின் 50வது பிறந்தநாள் - மறுவெளியீடாகும் சூப்பர் ஹிட் படம்..!! - Seithipunal
Seithipunal


வரும் ஜூன் 22ம் தேதி தளபதி விஜயின் 50வது பிறந்தநாள் வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாக விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஒன்று ஜூன் 21ம் தேதி உலகெங்கிலும் மறு வெளியீடாக உள்ளது. 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "போக்கிரி". 

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்த்ராஜ், சீமான் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். கனக ரத்னா மூவீஸ் சார்பில் எஸ். சத்திய மூர்த்தி தயாரித்த இப்படத்தை நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா இயக்கி இருந்தார்.

காதல், ஆக்சன், நகைச்சுவை மற்றும் நடனத்தில் கலக்கியிருந்த தளபதி விஜயின் திரைப் பயணத்தில் போக்கிரி திரைப்படம் ஒரு பெரிய மைல்கல் என்றே சொல்லலாம். அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ள இப்படத்தின் திரைக் கதையும் மிகவும் விறு விறுப்பாக இருக்கும்.

மேலும் போக்கிரி திரைப்படம் 'ஷிப்டிங்' என்று அழைக்கப்படும் மறு வெளியீட்டில் அப்போதே வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தளபதி விஜயின் 'கில்லி' திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு 50 நாட்களை நோக்கி மாபெரும் வெற்றியுடன் ஓடிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டமாக 'போக்கிரி' திரைப்படத்தின் மறு வெளியீட்டிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளும் ஆர்வமுடன் காத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Super Hit Movie Re Release for Vijays 50th Birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->