கொலமாஸ் சாரே.!! தெறிக்கும் தோட்டாக்கள்.!! மிரட்டும் தனுஷ்.! கேப்டன் மில்லர் டிரெய்லர் வைரல்.!!
tamil cinema captain miller trailer released viral
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதிக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், சுமேஷ் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியை கொண்டு திரைப்படமாக உருவாக்கியுள்ள கேப்டன் மில்லருக்கு யு/எ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிர வைக்கும் சண்டைக் காட்சிகள், வெடித்து சிதறும் தோட்டாக்கள் என விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ள கேப்டன் மில்லர் ட்ரெய்லரில் மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் தனுஷ் காட்சியளிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த ட்ரெய்லர் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
English Summary
tamil cinema captain miller trailer released viral