அமரன் பட டீசருக்கு வலுக்கும் எதிர்ப்புகள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்திகேயனனின் 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்து வருகிறது. 

இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவப் படையை பிடித்து அவர்களை கொலை செய்வது போன்று தொடங்குகிறது. 

இந்த நிலையில், திருநெல்வேலியில் அமரன் படத்தின் டீசரில் காஷ்மீர் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக கூறி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். 

அதுமட்டுமல்லாமல், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இந்தியா கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Peoples Democratic Party objections amaran movie teaser


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->