ரஜினியுடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்! அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இயக்குநர் த.செ.ஞானவேல் இந்த படத்தை இயக்க உள்ளார். 

ரஜினியின் ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை அமைக்கிறார். 

படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியான நிலையில், நாளை திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளையும், அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பை கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்த படத்தில் நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், நடிகர் ராணா டகுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஹும்' படத்தில் அமிதாப் பச்சனுடன் ரஜினி நடித்திருந்தார்.

32 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது இந்திய சினிமா வட்டாரத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalaivar 170 rajini and amithab


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->