அஜித் பட இயக்குனருடன் இணையும் தளபதி விஜய்.. தளபதி 68 படத்தின் அசத்தல் அப்டேட்.!
Thalapathi 68 movie directed by venkat Prabhu
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கௌதம் மேனன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஹாலிவுட் நடிகர் சஞ்சய் நடிகை பிரியா பவானி சங்கர் திரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 68வது திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் நடிகர் விஜயின் 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படமும் நல்ல வரவேற்று பெற்று வருகிறது.
English Summary
Thalapathi 68 movie directed by venkat Prabhu