தளபதி 66 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட நடிகர் விஜய்.?! அந்த மனசு தான் சார் கடவுள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.

 இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்க வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் நடிகர் விஜய் படப்பிடிப்பை சென்னையில் தான் நடத்த வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம். 

இதற்கு காரணம் ஷூட்டிங் சென்னையில் நடந்தால் பெப்ஸி ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்பதால் விஜய் படக்குழுவிடம் இப்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy 66 movie shoot in chennai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->