தாத்தாவைப் போல டைரக்ஷனில் இறங்கிய தளபதியின் மகன் ஜேசன்.! வைரல் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் லண்டனை சார்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும்  தியா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.

தளபதி விஜயின் மகனுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெளியான பிரேமம் திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் விஜய் மகனை நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் ஜேசன் அதற்கு மறுத்து விட்டார்.

தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை மற்றும் கனவாக இருந்திருக்கிறது. இதற்காக அமெரிக்கா சென்று சினிமா இயக்குவது பற்றி படித்தும் வந்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். மேலும் தான் படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

தற்போது இவரது இயக்கத்தில் பெரிய அளவில் குறும்படம் ஒன்று தயாராக இருக்கிறது. அந்த குறும்படத்திற்கு 'புல் தி ட்ரிகர்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த குறும்படத்தின் மூலம் விஜயின் மகன் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy vijay son maes debut as a director through a short film


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->