தாமரைக்காக வருண் கொடுத்த பரிசு.. நெகிழ்ச்சியுடன் பிக்பாஸ் அல்டிமேட்டில் தாமரை.!
thamarai about varun in last season
பிக் பாஸ் நிகழ்ச்சி சில வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. விஜய் டிவியின் டிஆர்பிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது உண்மை. எனவேதான் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்தது. மிகப்பெரிய அளவில் சுவாரசியத்தை நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை. அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் லைவாக அப்படியே ரசிகர்கள் பார்த்துக்கொள்ள முடியும்.
பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டபோது தாமரை போட்டி ஒன்றில் கலந்துகொண்டு கேஸ் ஸ்டவ் ஒன்றை பரிசாக பெற்றார். அதன் பின்னர், இதுபோல நிறைய பொருட்கள் வாங்க வேண்டும் என்று அவர் ஆசையாக தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் வரும் தாமரைக்காக பிரிட்ஜ் மற்றும் மைக்ரோ அவனை பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து பிக்பாஸ் அல்டிமேட்டில் தாமரையே தற்போது நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
English Summary
thamarai about varun in last season