நாளை விக்ரம் பிறந்தநாள்.. 'தங்கலான்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!
Thangalan movie update on tomorrow morning 9.05AM
மெட்ராஸ் மற்றும் அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். பின்னர், ரஜினியை வைத்து கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.
கடைசியாக இயக்குனர் ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் கே.ஜி.எப் படம் போல இருக்குமென்று ஏற்கெனவே பா.ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இதுவும் கோலார் தங்க சுரங்கத்தில் வசிக்கும் மக்களின் கதை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' படத்தின் முக்கிய அப்டேட்டை விக்ரமின் பிறந்த நாளான நாளை (ஏப்ரல் 17ம் தேதி) காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Thangalan movie update on tomorrow morning 9.05AM