பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நேற்று முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடந்த முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் முதல் இடத்தையும், 15 காளைகளை அடங்கிய குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 2-வது இடத்தையும், 14 காளைகளை அடக்கிய திருப்புவனத்தை சேர்ந்த முரளிதரன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த நிலையில் இன்று மாட்டு பொங்கலையொட்டி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வீரர்கள் வைறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் சிலர் கையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளை ஏந்தியபடி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples banner hoisted aginst tungsten in palamedu jallikattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->