வள்ளுவன் காவியா? வெள்ளையா? ஆளுநர் vs முதல்வர்! - Seithipunal
Seithipunal


திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் காவி நிறத்தில் உள்ள திருவள்ளுவருக்கும், முதலமைச்சர் முக ஸ்டாலின் வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவருக்கும் மரியாதையை செலுத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

தமிழக ஆளுநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை  வழங்கினார். 

பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். 

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும்.  திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன" என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "உலகத்தார் அனைவருக்கும் பொதுநெறி வழங்கிய தமிழ்ப் பேரறிவின் அடையாளம் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்! குறள் வழி நடப்போம்! சமத்துவச் சமுதாயம் பேணுவோம்" என்று குறிப்பிட்டு இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvalluvar thinam CM Stalin Governor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->