முதல் படம் வெளியாவதற்கு முன்பே உயிரிழந்த இயக்குநர்! - Seithipunal
Seithipunal


20 ஆண்டுகள் கேரள திரைத்துறையில் பணியாற்றி, தன்னுடைய முதல் படத்தை எடுத்து முடித்து அந்த படம் வெளியாவதற்கு முன்பே இயக்குநர் பைஜூ உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் முதல் படம் வெளியாகவிருந்த நிலையில், மலையாள இயக்குநர் பைஜு பரவூர் ( 42) உயிரழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 45 படங்களில் புரொடக்‌ஷன் கன்ட்ரோலராக பணியாற்றியவர் இயக்குநர் பைஜு பரவூர். தன் முதல் படமான சீக்ரெட்ஸ் எனும் திரைபடத்தை பைஜூ எடுத்து முடித்துள்ளார். இந்தப் படத்தின்  போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஃபுட் பாய்சன் காரணமாக பைஜூ பரவூர் நேற்று உயிரிழந்ததாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது.. கடந்த 24ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள ஒரு  உணவகத்தில் திரைப்படம் தொடர்பான கலந்துரையாடலுக்குச் சென்றிருந்த இயக்குநர் பைஜு, அங்கு உணவு சாப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து வீடு திரும்பிய பைஜூவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் பைஜூ சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தொடர்ந்து உடல்நிலை மோசமடையவே, கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு பைஜூ அழைத்துச் செல்லப்பட்டு சிசிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், கோழிக்கோட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட உணவால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என சந்தேகிப்பதாக பைஜூவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The director died before the release of the first film


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->