லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை! அன்னபூரணி படம் ஓ.டி.டி யில் இருந்து நீக்கம்!! - Seithipunal
Seithipunal


நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில்  இருந்து  நீக்கப்படுவதாக,  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக  நயன்தாரா, ஜெய் நடித்த  அன்னபூரணி படத்துக்கு எதிராக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்துக்களின் மனம் புண்படும்  வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் நடிகர் ஜெய்யுடன் ‛ராஜா ராணி’ திரைப்படத்தில் இணைந்து நடித்தார். அதன்பிறகு இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‛அன்னபூரணி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலஷ் கிருஷ்ணா இயக்கி உள்ளார். திரைப்படத்தில் நயன்தாரா, ஜெய் உடன் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேணுகா, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் வெளியாகி, நெட்பிளிக்ஸில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் திரைப்படத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக  புகார் எழுந்தது.

படத்தில் வரும் ஒரு காட்சியில்,   சமையல் கலைஞராக நடிகை நயன்தாரா மாற நினைப்பார். அவர் சிறந்த சமையல் கலைஞராக மாறினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் முடிவாகும். மற்றோரு காட்சியில் ஜெய் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டாரா ? என  கேட்டிருப்பார். 

வால்மீகியின் இராமாயணத்தில்,  வனவாசத்தின் போது ராமன், லட்சுமணன் இருவரும்  வேட்டையாடிய  சீதாவுடன் சாப்பிட்டனர். அதனால் ராமன் விஷ்ணுவின் அவதாரம் இல்லை என சொல்லி விட முடியுமா?’’ போன்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தது. 
அதோடு அர்ச்சகரின் மகள் நமாஸ் செய்வது போன்ற கட்சியும் இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி பார்க் போலீசில் புகார் செய்திருந்தார். அதில், நயன்தாரா, ஜெய், டைரக்டர் நிலேஷ் கிருஷ்ணா, பஜாதின் சேதி ரவீந்திரா புனித் கோனேகா ஜீ ஸ்டியோஸ் தலைமை அதிகாரி ஷாரிக் படேல், நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை அதிகாரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில்,எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அன்னபூரணி திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The test came to the lady superstar! Annapoorani removed from ODT!!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->