ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த 'விருந்து' படத்தின் டிரெய்லர் வெளியானது! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். 

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. ஹீரோவாக மாஸ் காட்டி வந்த நடிகர் அர்ஜுன், மங்காத்தா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்காமல் சமீபகாலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த மங்காத்தா, இரும்புத்திரை மற்றும் லியோ ஆகிய படங்கள் கவனம் பெற்றன. இப்போது நடிகர் அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த சமயத்தில், அவர் ஹீரோவாக நடித்துள்ள "விருந்து" என்ற திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தை தாமர கண்ணன் இயக்கியுள்ளார். நெய்யார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மலையாளத்தில் இப்படத்திற்கு விருன்னு என்று பெயரிடப்பட்டுள்ளது .

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் நடித்த 'விருந்து' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The trailer of action king Arjun starrer Virundhu has been released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->