'ஏ' தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள நானியின் "ஹிட் 3" படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நாளை..!
The trailer of Nani film Hit 3 which has received an A censor certificate will be released tomorrow
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை'( சரிபோதா சனிவாரம்) படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 01-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான 'காதல் வெல்லுமா' வெளியாகி வைரலானது. நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் ஹிட்-04-இல் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 'ஹிட் 3' படத்தின் டிரெய்லர் நாளை காலை 11:07 மணிக்கு வெளியாக உள்ளது. விசாகப்பட்டினத்திலுள்ள சங்கம் தியேட்டரில் நாளை காலை 10:30 மணிக்கு டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற உள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் தணிக்கை வாரியம் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The trailer of Nani film Hit 3 which has received an A censor certificate will be released tomorrow